|
|
| பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால நிதிக்கான வட்டி விகிதத்தை (ரீப்போ ரேட்) ஒரு சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த ரீப்போ விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், ரீப்போ விகிதம் குறைப்பால் பணவீக்கம் மிதமான அளவை எட்டவும், வளர்ச்சி விகிதத்தை பராமரிக்கவும் உதவும் என்றார். வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்திற்கான (சிஆர்ஆர்) வட்டியை 0.25 சதவீத ஆர்.பி.ஐ. குறைத்ததைத் தொடர்ந்து, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியை சந்தையில் விடுவிக்க ஏதுவாக ரீப்போ விகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு முன்னர் கடந்த 2004-ம் ஆண்டில் ரீப்போ விகிதம் குறைக்கப்பட்டது. |


