வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால நிதிக்கான வட்டி விகிதத்தில் (ரீப்போ ரேட்) ஒரு சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதால், வீட்டுக்கடன், தனிநபர் கடன் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது.
கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு, ரீப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. வட்டி விகிதத்தை குறைக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, ஐசிஐசிஐ வங்கியின் இணை நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் கூறுகையில், “நிதிக்கொள்கை சுமூகமாக செயல்படவும், நிதிச்சந்தையில் வளர்ச்சி சுமூகமான நிலையை எட்டவும் ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி விகிதக் குறைப்பு ஏதுவாக அமையும்” என்றார்.


